சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தளபதியின் பாடலை டைட்டிலாக கொண்ட தனுஷின் அடுத்த படம்.. பான் இந்தியா பட வைரல் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு சமீப காலமாக பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது கூட ஹிந்தி படத்தை தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து ஹிந்தி, ஹாலிவுட் என பல மொழிகளில் நடித்து வரும் தனுஷ் தற்போது நேரடியாக தெலுங்கு சினிமாவில் நுழைந்துள்ளார். இப்படத்திற்கு வாத்தி என பெயர் வைத்துள்ளனர். அதாவது பள்ளியில் நடக்கும் சம்பவங்களும், மாணவர்களுக்காக போராடும் ஆசிரியராகவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நீ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன அதனால் கண்டிப்பாக வாத்து திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் தனுஷ் கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் வீடியோ வெளியிட்ட தன்னுடைய படத்தின் அடுத்த தலைப்பு என அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vaathi-poster
vaathi-poster

Trending News