வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இணையத்தில் கசிந்த தனுஷின் படக்காட்சிகள்.. அச்சத்தில் இருக்கும் படக்குழு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தனுஷ் கதைக்கு முக்கியத்துவம் படங்கள் மட்டுமே தற்போது தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது மட்டுமில்லாமல் படத்தின் தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

அதனால் தற்போது தனுஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் பொருத்தவரை அனைத்து விதமான கதாபாத்திரம் ஏற்று நடிப்பதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும். அசுரன் படத்தில் வயதான தோற்றம் இளமையான தோற்றம் என இரண்டிலுமே கலக்கியிருந்தார். அதனால் தற்போது ரசிகர்கள் தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்துவதை விட கதையில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக அவர் அடுத்தடுத்த தளத்திற்கு செல்வார் என கூறி வந்தனர்.

ஆனால் தனுஷ் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆரம்ப காலத்தில் தனக்கு உதவியாக இருந்த இயக்குனர்களுக்கு தற்போது வாய்ப்பு கொடுத்து வருகிறார். தற்போது தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

thiruchitrambalam
thiruchitrambalam

புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் காதல் செய்யும் காட்சிகள் எடுத்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் காதல் செய்யும் காட்சி என பலரும் கூறி வருகின்றனர். தனுஷ் ஏற்கனவே 3 படத்தில் பள்ளி பருவ காதல் கதையில் நடித்திருந்தார். தற்போது இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் பள்ளி பருவ காதலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் காதல் காட்சியை நடிக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனை நாட்களாக படப்பிடிப்பை பாதுகாப்பு நடத்தி வந்த படக்குழு படத்தின் காட்சிகள் வெளியானதால் தற்போது அச்சத்தில் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Trending News