திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

செல்வராகவனை ஓரம் கட்டிய தனுஷ்.. வளர்த்த கடா மார்பில் முட்டுது! இவ்வளவு கோடி சம்பளமா.?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெற்றி கண்ட கர்ணன் படம் தனுஷுக்கு எந்த அளவிற்கு புகழை சேர்த்ததோ அதே அளவிற்கு ஜகமே தந்திரம் மார்க்கெட்டை சரித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்த ஜகமே தந்திரம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நெகட்டிவான விமர்சனங்களை பெற்று உள்ளது. இதற்கிடையில் நரேன் இயக்கத்தில் நடித்து வந்த D 43 முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இதை தவிர தெலுங்கு படத்திலும் நடிப்பதாக பேச்சுவார்த்தையில் இருந்த சூழ்நிலையில் தற்போது அது உறுதியாகி விட்டதாம். செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார் தனுஷ்.

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் தனுஷ் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ஒப்புக் கொண்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று இது ஒரு PAN இந்தியா மூவியாக வெளிவர உள்ளதால் அதாவது தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.

அதைத் தவிர இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 30 கோடி வரை தனுசுக்கு இந்த படத்திற்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதனால் செல்வராகவன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தள்ளிப் போய் விட்டதாம். செல்வராகவன் தலையில் துண்டு போட்ட கதையாக தற்போது என்ன செய்வது என்று விழிபிதுங்கி உள்ளார்.

எது எப்படியோ காசு, பணம், துட்டு என்று வந்து விட்டால் அண்ணன் என்னடா, தம்பி என்னடா. இந்தப் PAN இந்தியா படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்துவிடுவார் தனுஷ் என்பதுதான் கணக்கு.

ஆனால் தனுஷ் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்திற்கு அடைந்ததற்கு முக்கிய காரணம் செல்வராகவன் தான் என்பதை நன்றியை மறக்காமல் இருந்தால் போதும் என்பதே ரசிகர்களின் ஆதங்கம்.

D-43, நானே வருவேன், சேகர் கம்முலா படங்கள் மட்டுமின்றி ராட்சசன் இயக்குனர் ராம்குமார், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ்  இயக்கத்திலும் நடிக்க உறுதி அளித்துள்ளார் தனுஷ். இப்படி அடுக்கடுக்காக தனுஷுக்கு அடுத்த 3 வருடங்களுக்கு படங்கள் குவிந்த வண்ணமாக உள்ளன.

D43-cinemapettai
D43-cinemapettai
- Advertisement -spot_img

Trending News