திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

தனுஷின் நோட்டீஸ்.. அஜித் பற்றி பேசிய வீடியோ ட்ரோல்.. தொடர் கேலி, கிண்டல்? விக்னேஷ் சிவன் எடுத்த திடீர் முடிவு!

சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். திறமையுள்ளவர்கள் இத்துறையில் நீண்டு நிலைக்கிறார். அவர்களின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து படம் இயக்குகிறார்கள்.

அந்த வகையில், போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவர், தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான். காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கிய நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தை இயக்கி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்குனராக இருக்குனராக இருப்பதுடன், தயாரிப்பாளராகவும், பாடலா சிரியராகவும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில், இத்தம்பதியரின் திருமண டாகுமெண்டரி நெட்பிளிக்ஸில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நயன்தாராவை திருமணம் செய்து கொண்டதுதான் சாதனையா? என விக்னேஷ் சிவனுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனுஷ் – அஜித் ரசிகர்களின் ட்ரோலுக்கு ஆளான விக்னேஷ் சிவன்!

மேலும் அவர் இயக்கிய ஒரே படம் தான் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படம் நானும் ரவுடிதான். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படத்தின் கிளிப்ஸை, நயந் விக்கி திருமண டாகுமெண்டரில் பயன்படுத்தியதாக 10 கோடி தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு, நயன்தாரா 3 பக்க அறிக்கை வெளியிட்டு தனுஷை சாடியிருந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன், சமீபத்தில் , ஒர் ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், நானும் ரவுடிதான் படத்தை அஜித் பலமுறை பார்த்ததாக தன்னிடம் கூறியதாகவும், என்னை அறிந்தால் படத்திற்கு பாடல் எழுதிய போது, இது நடந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், நானும் ரவுடிதான் படத்துக்கு முன்னமே என்னை அறிந்தால் படம் வெளியானதால் சர்ச்சையானது இந்த வீடியோ.

எக்ஸ் தள அக்கவுண் டீ ஆக்டிவேட்!

இதையடுத்து, அஜித் ரசிகர்களும், தனுஷ் ரசிகர்களும் ரவுண்டு கட்டி, விக்னேஷ் சிவனை ட்ரோல் செய்து வருவதாலும், அவரது பேச்சுக்கு விமர்சனம் குவிந்து வருவதால் தான் விக்னேஷ் சிவன், தன் எக்ஸ் தள கணக்கை டீ ஆக்டிவேட் செய்ததாக தகவல் வெளியாகிறது. விரைவில் இதுகுறித்து அவர் விளக்கம் அளிப்பார் எனத் தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News