வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிடப்பில் போட்ட கதையை கையில் எடுத்த தனுஷ்.. பாகுபலி போல் தாக்கத்தை ஏற்படுத்த போகும் படம்

தனுஷ் தொடர் தோல்விக்கு பிறகு இப்போது தான் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதில் திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியான நானே வருவேன் படத்திற்கு நேர் மற்றும் எதிர் என கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

தற்போது தனுஷ் வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிடப்பில் போட்ட படத்தை மீண்டும் தனுஷ் கையில் எடுத்துள்ளார். அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அசுரன் படத்தில் நடித்த போது நான் ருத்ரன் என்ற படத்தை தனுஷ் இயக்க போவதாக தகவல் வெளியானது.

Also Read :தனது கெத்தை விட்டுக் கொடுக்காத ரஜினி.. மார்க்கெட் சரிவால், மாமாவிடம் கெஞ்சிய தனுஷ்

ஏற்கனவே தனுஷ் ப பாண்டி என்ற படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து நான் ருத்ரன் படத்தின் சூட்டிங் தொடங்கி சில நாட்களில் நடைபெற்ற நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் தடைப்பட்டது. இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், அதிதி ராவ் ஹைதாரி, ஸ்ரீகாந்த், எஸ் ஜே சூர்யா போன்றோர் நடிக்க கமிட் ஆகி இருந்தனர்.

தேனாண்டாள் பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் இப்படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்திருந்தது. இந்த படம் சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய கதைகளத்தை கொண்டு எடுக்கப்பட்டு வந்தது. இந்த படம் உருவானால் பாகுபலி போல் தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

Also Read :தமிழ் ராக்கர்ஸை ஆட்டம் காண வைத்த தனுஷ்.. சிக்காமல் சிட்டாய் பறக்கும் நானே வருவேன்

மேலும் சில காரணங்களினால் நான் ருத்ரன் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இப்படத்தை கையில் எடுக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார். இதனால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர உள்ளதாக செய்தி வெளியாகி உள்ள நேரத்தில் தற்போது நான் ருத்ரன் படத்தை தனுஷ் மீண்டும் இயக்க போவதால் அவரது ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இனிமேல் தனுஷ் தொட்டதெல்லாம் வெற்றி தான் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்த வருகிறார்கள்.

Also Read :பொன்னியின் செல்வனால் பலத்த அடி வாங்கிய தனுஷ்.. கிடப்பில் போட்ட படத்தை கையில் எடுத்த செல்வராகவன்

Trending News