திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கல்லா கட்ட பலே திட்டம் போட்ட தனுஷ்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி

தனுஷ் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் இப்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாக காத்திருக்கிறது.

இந்த சூழலில் தனது கல்லாவை நிரப்ப தனுஷ் பலே திட்டம் ஒன்று போட்டுள்ளார். அதாவது ஆரம்பத்தில் தனுஷ் தனது வுண்டர்பார் என்ற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். இப்போது மீண்டும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் 15 படத்தை தயாரிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also read: சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

அதாவது மாரி செல்வராஜ், தனுஷ் கூட்டணியில் வெளியான கர்ணன் படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஒடுக்கப்பட்ட கிராமத்தின் அநீதிக்கு எதிர்த்து போராடும் கதைகளமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக மீண்டும் மாரி செல்வராஜ், தனுஷ் இணையும் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை தனுசே சொந்தமாக தயாரிக்கிறார். மேலும் ஜி ஸ்டூடியோவும் இதில் இணைந்த செயல்பட இருக்கிறது. இந்த படமும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: தனுஷ் வரிசையில் இணைய போகும் தளபதி விஜய்.. பரபரப்பாக வெளியான தளபதி 68 அப்டேட்

மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைவதில் மகிழ்ச்சி என தனுஷ் கூறியுள்ளார். ஏற்கனவே மாரி செல்வராஜ் துருவ் விக்ரம், விக்ரம் மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது தனுஷ் உடன் கூட்டணி போட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மேலும் சில அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது. தனுஷ் கடந்த சில வருடங்களாக தரமான ஒரு ஹிட் படம் கொடுக்காத நிலையில் கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Also read: தனுஷ்- அனிருத் இடையில் அதிகரித்த விரிசல்.. பல கோடியை விட்டு எறிந்த சம்பவம்

Trending News