ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் தனுஷ்.. இணையத்தை கலக்கும் பேமிலி புகைப்படம்

Actor Dhanush posted a family photo for Pongal: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12ம் தேதி வெளியாகி திரையரங்கில் சக்கை போட்டு போட்டுக் கொண்டிருக்கிறது. படம் முழுக்க துப்பாக்கி சத்தமும், ரத்த களரியுமாக இருந்தாலும் இளசுகளின் பேவரைட் படமாக கேப்டன் மில்லர் வசூலில் பின்னி பெடல் எடுக்கிறது.

இந்த சந்தோஷத்தில் தனுஷ் தன்னுடைய பொங்கலை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இதில் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லாத குறை மட்டும் தான். தனுஷ் மட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்

இருவரும் சினிமாவில் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து, தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதில் தனுஷின் இரண்டு மகன்கள் ஆன லிங்கா, யாத்ரா மற்றும் தனுஷின் அம்மா, அப்பா இருவரும் அந்த புகைப்படத்தில் இருக்கின்றனர். இதில் தனுஷ் உடன் அவருடைய இரண்டு மகன்களும் வேட்டி சட்டையில் கலக்குகின்றனர்.

Also Read: பொங்கல் ரேஸில் வென்றது யார்? கேப்டன் மில்லர், அயலானின் 2ம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்

பொங்கலுக்கு குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்

அதுவும் மூத்த மகன் யாத்ரா தனுஷை மிஞ்சி வளர்ந்து நிற்கிறார். இவரை பார்க்கும்போது அப்படியே அச்சு அசல் இளம் வயது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி தெரிகிறது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் யாத்ரா எந்த சோசியல் மீடியாவிலும் இல்லாத போதிலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மத்தியில், அடுத்த ரஜினி இவர்தான் என்ற பெயரை எடுத்துள்ளார்

அதோடு பொங்கல் பண்டிகையில் தனுஷ் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது. அது மட்டுமல்ல தனுஷ் குடும்பத்திற்கு ரசிகர்களும் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

தனுஷ் பேமிலி புகைப்படம்

dhanush-pongal-photo-cinemapettai
dhanush-pongal-photo-cinemapettai

Also Read: ரஜினி ஹீரோயிசம் காட்டாத 6 படங்கள்.. நூறாவது படத்தில் தோற்றுப் போன தலைவர்

Trending News