தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் வெளியானது. அமரன், லக்கி பாஸ்கர், ப்ளடி பெக்கர், பிரதர். இந்த 4 படங்களில் அமரனும், லக்கி பாஸ்கரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சற்று அடி வாங்கி வருகிறது.
இந்த நிலையில் தனுஷ், சமீபத்தில் இந்த 4 படங்களில் ஒரு படத்தை பார்த்து சூப்பரா இருக்கு, வேற லெவல் என்று பாராட்டியுள்ளார். தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகின்றார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் இட்லி கடை திரைப்படமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இது தவிர, அவர் லைன் அப்பில் வரிசையாக 10 படங்கள் உள்ளன.
ஓரவஞ்சனை காட்டும் தனுஷ்
சமீபத்தில் துல்கர் சல்மானை லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளார் நடிகர் தனுஷ். இதை பார்த்து விட்டு வேற லெவல் படம் என்று இயக்குனரை அழைத்து பயங்கரமாக பாராட்டியுள்ளாராம். லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி ஏற்கனவே தனுஷை வைத்து வாத்தி என்று ஒரு படம் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், “லக்கி பாஸ்கர் நல்ல படம் தான், ஆனால் அதை பார்த்து பாராட்டிய தனுஷ், ஏன் அமரன் படத்தை பாராட்டவில்லை” என்ற கேள்வி வந்துள்ளது. இன்னும் சிலர். “ஏன் பாஸ் இந்த ஓரவஞ்சனை.. என்ன இருந்தாலும் உங்கள் செல்லப்பிள்ளை இல்லையா?” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.