தனுஷ், மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் இணையும் ப்ராஜெக்ட் நீண்ட நாட்களாகவே இழுத்தடித்து வருகிறது. ஏற்கனவே லியோ பட நேரத்தில் லலித், தனுசுக்கு அடுத்த படம் பண்ணுமாறு 14 கோடிகள் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.
எச் வினோத் இயக்க தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை லலித் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென ஜனநாயகன் படத்திற்காக எச். வினோத்தை, விஜய் அழைத்துள்ளார். ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார் லலித்.
தங்கள் நிறுவனத்துக்கு படம் பண்ணிவிட்டு அடுத்ததாக விஜய் படத்துக்கு செல்லுங்கள் எனவும் கூறியிருக்கிறார் லலித். ஆனால் தனுஷ், விஜய் படம் பண்ணுவது பெரிய வாய்ப்பு, அதனால் வினோத்தை முதலில் ஜனநாயகன். படத்தை பண்ணுமாறு அனுப்பியுள்ளார்.
எப்படி பார்த்தாலும் இவர்கள் கூட்டணி நிறைவடைய ஒரு வருடம் ஆகும், பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும் என அப்போதே வாங்கிய 14 கோடி அட்வான்சையும், லலிதிற்கு திரும்ப கொடுக்க முன்வந்துள்ளார் தனுஷ் . ஆனால் லலித் அதை வாங்க மறுத்துள்ளார். மீண்டும் அடுத்து மூன்று மாதம் கழித்தும் பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்துள்ளார்.
அப்போதும் லலித் வாங்க மறுத்து ஒரு வருடம் கழித்து படம் பண்ணிக்கலாம் என தனுசை ஆசுவாசப்படுத்தி இருக்கிறார்.இப்படி எச். வினோத்திற்காக தனுஷ் விட்டுக் கொடுத்தது பெரிய விஷயம்தான். விஜய்- வினோத் தான் தன்னுடைய கடைசி படம் பண்ண வேண்டும் என அடம்பிடித்து அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.