செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய தனுஷ்.. ரிலீசுக்கு முன்பே பல கோடி பிசினஸ் செய்த வாத்தி

தனுஷ் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் தொடர்ந்து தனுஷ் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனுஷின் வாத்தி படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்து வருகிறார். சமீபத்தில் வாத்தி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read :கிடப்பில் போட்ட கதையை கையில் எடுத்த தனுஷ்.. பாகுபலி போல் தாக்கத்தை ஏற்படுத்த போகும் படம்

தனுஷின் வாத்தி படத்திற்கு ஓடிடி தளத்தில் கடும் போட்டி நிலவியது. கடைசியாக ஆஹா தமிழ் ஓடிடி வாத்தி படத்தை கைப்பற்றி உள்ளது. மேலும் ரிலீசுக்கு முன்பே வாத்தி படம் பல கோடி லாபம் பார்த்துள்ளது. இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரிலீசுக்கு முன்பு 90 கோடி வியாபாரம் ஆகி இருந்தது.

தற்போது சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளி உள்ளார் தனுஷ். அதாவது தனுஷின் வாத்தி படம் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை 50 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டு உரிமை 30 கோடி, தெலுங்கு 15 கோடி, கர்நாடகா 3 கோடி, கேரளா 1 கோடி, வெளிநாட்டு உரிமை 10 கோடி மற்றும் ஆடியோ ரைட்ஸ் மூன்று கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

Also Read :ரிலீசுக்கு முன்பே 90 கோடி லாபம் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. சூர்யா, சிம்பு எல்லாம் ஓரமா போங்க

மொத்தமாக ரிலீசுக்கு முன்பே வாத்தி படம் 127 கோடி வியாபாரம் ஆகி உள்ளது. வாத்தி படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் திரையரங்குகளிலும் நல்ல வசூல் வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது. தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் வசூலை வாத்தி படம் முறியடிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read :தமிழ் ராக்கர்ஸை ஆட்டம் காண வைத்த தனுஷ்.. சிக்காமல் சிட்டாய் பறக்கும் நானே வருவேன்

Trending News