வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுச்சி லீக்ஸ், விவாகரத்து, போயஸ் கார்டன் ரகசியம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘ராயன்’ இசைவெளியீட்டு விழா மேடை

Raayan Audio Launch: சமீப காலமாக நடிகர் தனுஷ் பெயர் நிறைய சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் பல பிரபலங்களின் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்ற வேற சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷ் மீது வைத்த குற்றச்சாட்டு எல்லாம் இப்படியும் கூட ஒரு மனுஷன் இருப்பானா என்று யோசிக்கும் அளவுக்கு இருந்தது.

இந்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட நடிகர் கார்த்திக் இதற்காக நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் இவ்வளவு பெரிய பழி தன் மீது சுமத்தப்பட்டு நடிகர் தனுஷ் வாயை திறக்காமலேயே இருந்தார். அதேபோன்று தன்னுடைய விவாகரத்து செய்தி பற்றியும் அவர் என்றைக்குமே எதுவுமே பேசியது கிடையாது.

ஆனால் இந்த சர்ச்சைக்கு எல்லாம். வைக்க ராயன் பட இசை வெளியீட்டு விழா மேடையை பயன்படுத்தி இருக்கிறார். தனுஷின் ஐம்பதாவது படமாக ரிலீஸ் ஆக இருப்பது ராயன். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூலை 6ஆம் தேதி தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் நடைபெற்றது. அந்த மேடையில் தனுஷ் மற்றும் ஏ ஆர் ரகுமான் பாடிய அடங்காத அசுரன் பாடல் வீடியோ கூட பெரிய அளவில் வைரல் ஆகியது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ்

தனுஷ் மேடை ஏறி பேசிய போது தன்னை சுற்றி பல சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்திருக்கிறார். இந்த தமிழ் சினிமாவில் அதிகமான பாடி சேமிங்கை அனுபவித்தது நான் தான். என்னைப் பற்றி நிறைய சர்ச்சையான விஷயங்கள் வெளிவந்து இருக்கின்றன.

நிறைய முதுகில் குத்தும் சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி நான் யார் என்று என் அப்பா அம்மாவுக்கு தெரியும், என் பிள்ளைகளுக்கு தெரியும் மேலும் என் ரசிகர்களுக்கும் தெரியும். இவ்வளவு பிரச்சனையையும் சமாளித்துக் கொண்டு நான் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என்றால் அது ரசிகர்களாகிய உங்களால்தான்.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகன். எனக்கு ஒரு 15 வயது இருக்கும் போது ரஜினியின் வீட்டை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என போயஸ் கார்டன் போனேன். வெளியே நின்று அந்த வீட்டை பார்த்தேன் திரும்பி வரும் பொழுது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டையும் பார்த்தேன்.

சூப்பர் ஸ்டார் வீடு அதற்கு பக்கத்திலேயே ஜெயலலிதா வீடு என பிரம்மாண்டமாக இருந்தது. இந்த போயஸ் கார்டனில் நமக்கு என்று என ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என அப்போது எனக்கு தோன்றியது. ஆனால் அந்த கனவு நிறைவேற என்னுடைய 20 வருட உழைப்பு தேவைப்பட்டது.

கடினமாக உழைத்து தான் நான் அந்த வீட்டை கட்டினேன். சின்ன வயதில் அந்த இடத்தில் வீடு கட்ட ஆசைப்பட்ட வெங்கடேஷ் பிரபுவுக்கு தனுஷ் ஆக நான் கொடுத்த பரிசு தான் அந்த வீடு. அதன் பின்னால் இவ்வளவு சர்ச்சை வரும் என்று தெரிந்திருந்தால் அந்த வீடே நான் கட்டி இருக்க மாட்டேன் என மனம் உருகி பேசி இருக்கிறார் தனுஷ்.

Trending News