வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

Raayan : அடங்காத அசுரனாக மிரட்டும் தனுஷ்.. ஏஆர் ரகுமான் இசையில் பட்டையை கிளப்பும் ராயன் வீடியோ

நேற்றைய தினம் தக் லைஃப் படத்தில் சிம்புவின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இன்று ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது. தனுஷின் 50வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். மேலும் இப்படத்தில் துஷாரா, பிரகாஷ்ராஜ், சுதீப் கிருஷ்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். வருகின்ற ஜூன் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில் ஏஆர் ரகுமான் இசையில் அடங்காத அசுரனாக தனுஷின் சண்டை காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களை கவர உள்ளது. தனுஷின் படங்களில் அனிருத் இசையமைத்து வந்த நிலையில் இப்போது ஏ ஆர் ரகுமான் ராயன் படத்தில் பணியாற்றி இருக்கிறார்.

அடங்காத அசுரன் பாடல் வரிகளை தனுஷே எழுதி இருக்கிறார். அதோடு ஏ ஆர் ரகுமான் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். பிரபுதேவா இந்த பாடலுக்கு கோரியோகிராப் செய்திருக்கிறார்.

மேலும் ராயன் படத்தின் கதை வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுவும் போஸ்டரில் ரத்த கரையுடன் கையில் ஆயுதங்களுடன் தனுஷ் இருப்பதால் பக்க ஆக்சன் கதையாகத்தான் இந்த படம் உருவாகி இருப்பது தெரிகிறது.

தனுஷுக்கு தொடர்ந்து படங்கள் தோல்வியுற்று வரும் நிலையில் கண்டிப்பாக ராயன் படம் ஒரு நல்ல கம்பேக்காக அமையும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் இப்போது வெளியாகி உள்ள ராயன் பட பாடலை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ராயன் படம் வருகின்ற ஜூன் 13 உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

Trending News