Dhanush-Raayan: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் பொங்கல் விருந்தாக வெளிவந்தது. அதற்கு அடுத்து அவருடைய 50வது படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்ச கட்டத்துக்கு எகிற வைத்தது.
அதை அதிகரிக்கும் விதமாக தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா கொரியோகிராப் செய்திருக்கும் அப்பாடல் பார்க்கவே அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது.
ராயன் படத்தின் கதை
அதற்கேற்றார் போல் தனுஷின் குரலும் அந்த பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் ராயன் படத்தின் கதை இதுதான் என ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி தனுஷின் குடும்பத்தை வில்லன் கோஷ்டி கொன்று விடுகிறார்கள். அதற்கு பழி வாங்கும் விதமாக அண்டர் வேர்ல்ட் டானாக உருவெடுக்கிறார் தனுஷ்.
மேலும் தன்னைச் சேர்ந்த மக்களுக்கு தலைவனாகவும் அவர் மாறுகிறார். இதுதான் படத்தின் மையக்கரு என கூறுகின்றனர்.
அப்படி பார்த்தால் நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக மொத்தம் ஜூன் 13ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கும் ராயன் பாக்ஸ் ஆபிசை கலக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.