வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடங்காத அசுரனாக வெளியான ராயன்.. தனுஷின் 50வது படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Raayan Review: ஒரு நடிகன் என்பதை தாண்டி சிறந்த இயக்குனர் என்பதை தனுஷ் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார். அதனாலேயே அவருடைய ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் ராயன் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

raayan
raayan

இதற்கு முக்கிய காரணம் சன் பிக்சர்ஸ் ஏ ஆர் ரகுமான் என பிரம்மாண்ட கூட்டணி தான். அதிலும் படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் கொண்டாடப்பட்டது. அதை அடுத்து ட்ரெய்லரும் கதையை வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸ் ஆக இருந்தது.

raayan
raayan

இப்படி சோசியல் மீடியாவை கலக்கி வந்த ராயன் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் டிக்கெட் புக்கிங் சிறப்பான சம்பவமாக இருந்தது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு என்பதால் தற்போது திரையரங்குகள் ஆரவாரமாக இருக்கிறது.

raayan
raayan

ஆனால் மற்ற மாநிலங்களில் படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் நடிகர் என்பதை தாண்டி இயக்குனர் தனுசுக்கு தான் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ராயன் படத்தை பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை காட்டியிருக்கும் அவர் இடைவேளை காட்சியில் புல்லரிக்க வைத்து விட்டார். அவருக்கு அடுத்தபடியாக ஏ ஆர் ரகுமான் தான் படத்தின் இன்னொரு ஹீரோ.

raayan
raayan

இவர்கள் இருவரின் கூட்டணி அனல் பறக்கிறது. நிச்சயம் படம் வேற லெவல் வெற்றியாக இருக்கும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கின்றனர்.

raayan
raayan

அவர்களை சரியாக பயன்படுத்தி இருக்கும் தனுஷ் மீண்டும் இயக்குனராக தன்னை நிரூபித்துள்ளார். தற்போது படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழில் முதல் காட்சி முடித்தவுடன் ரசிகர்களின் மனநிலை என்ன என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

அடங்காத அசுரனாக மாஸ் காட்டும் தனுஷ்

Trending News