திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பேய் மாறி வருவான், இறங்கி செய்யும் தனுஷ்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டி விட்ட ராயன் ட்ரெய்லர்

Raayan Trailer: தனுஷ் பவர் பாண்டி படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கி இருக்கும் படம் தான் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்கின்றனர். எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷான் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அதோடு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படம் கிட்டதட்ட 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாம். ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

சிறு வயது முதலே ஓநாய் போல் தந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொள்கிறார். அதாவது காட்டில் சிங்கம், புலி போன்ற வலிமையான மிருகங்கள் இருந்தாலும் ஓநாய் மிகவும் ஆபத்து என்பதை அறிகிறார்.

தனுஷின் ராயன் பட ட்ரைலர்

மற்றொருபுறம் வில்லன் எஸ் ஜே சூர்யா தனுஷை ஆம்பள நான் நேரா வந்து இங்கே போட சொல்லு என்று வசனத்தை தெறிக்க விடுகிறார். ராயன் பேய் மாதிரி வருவான், வந்து இறங்கி செய்வான் என செல்வராகவனின் வசனமும் மாஸ் காட்டுகிறது.

தன்னுடைய காரியத்தை ஓநாய் போல் தந்திரமாக செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் ராயனாக வாழ்கிறார் தனுஷ். பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் போன்றோர்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே பெரிய வெற்றி எதுவும் கொடுக்காத தனுஷுக்கு ராயன் படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் ராயன் படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மாசாக என்ட்ரி கொடுக்கும் தனுஷ்

Trending News