முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் போன்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ராம்குமார் என்ன ஆனார் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரே ஒரு குறும்படத்தின் மூலம் இயக்குனராகி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருமாறியுள்ளார் ராம்குமார். முண்டாசுப்பட்டி படத்தில் காமெடி கலந்த வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு வெற்றி கண்டார்.
அதனைத் தொடர்ந்து மிரட்டலான த்ரில்லர் கதையில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய திரைப்படம் ராட்சசன். தமிழ் மொழியில் இருந்து நீண்ட நாள் கழித்து மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் எனவும் இதை பாராட்டி சொல்லலாம்.
அப்படிப்பட்ட ராம்குமார் அடுத்ததாக தனுஷ் படத்தில் பணியாற்றப் போவதாகவும், அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்தன. ஆனால் அறிவிப்பு வந்ததோடு சரி, கடந்த இரண்டு வருடமாக இதைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.
கடந்த இரண்டு வருட காலமாக ராட்சசன் படத்தை விட மூன்று மடங்கு அசத்தலான திரைக்கதையை தனுஷுக்காக உருவாக்கி வருகிறாராம் ராம்குமார். இந்த படத்திற்கு ஏற்கனவே வால் நட்சத்திரம் என பெயர் வைத்து விட்டனர்.
அறிவியல் சார்ந்த திரில்லர் கதையில் உருவாகும் இந்த படம் தனுஷின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமையும் எனவும் பட வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது இந்த கதைக்கான மொத்த வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு ரெடியாக இருக்கிறாராம் ராம்குமார்.
