திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் இறக்கிவிட்ட 50-வது பட போஸ்டர்.. மொட்டை கெட்டப்பில் மிரட்டல்

D50 Movie Poster: தனுஷ் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த கேப்டன் மில்லர் 100 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. அதை அடுத்து அவருடைய 50வது படத்திற்காக தான் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார்.

அவருடன் இணைந்து நித்யா மேனன், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை இன்னும் அதிகரிக்கும் வகையில் தற்போது ஒரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

அதில் D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் தனுஷ் மொட்டை தலையுடன் மேல் சட்டை இன்றி முதுகை காட்டியவாறு நிற்கிறார்.

Also read: நிற்காமல் ஓடும் பந்தயக்குதிரை.. அடேங்கப்பா! தனுஷ் கைவசம் இத்தனை படங்களா

அவருடைய தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் போதே படம் எந்த அளவுக்கு ரௌத்திரம் ஆக இருக்கும் என்று தெரிகிறது. அதேபோல் பொல்லாதவன், புதுப்பேட்டை மாதிரி வெறித்தனமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

D50 போஸ்டர்

d50-dhanush
d50-dhanush

சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அமரன் பட குழுவும் ஒரு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தனுஷ் பட போஸ்டரும் வெளியாகி இருப்பது சபாஷ் சரியான போட்டி என சொல்ல வைத்துள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவரின் ரசிகர்களும் சோசியல் மீடியாவை ரணகளம் செய்து வருகின்றனர். அதில் இன்று குறிப்பாக தனுஷ் பட அப்டேட் வந்திருப்பது வெறும் வாய்க்கு கிடைத்த சோளப்பொறியாக மாறி இருக்கிறது. ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் தனுஷ் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து விட்டார்.

Also read: தனுசையே மிஞ்சிய சிவகார்த்திகேயன்.. டைட்டில் காப்பியில் இத்தனை படங்களா?

Trending News