தனுஷின் 51வது படம் “குபேரா” இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கம்முலா இயக்கி வருகிறார். மும்பையில் இந்த படம் மும்பரமாக சூட்டிங் நடைபெற்று வருகிறது. தனுஷின் அண்ணன் செல்வராகவன் மும்பையில் அவர் உடன் தான் இருக்கிறார்
ஏற்கனவே தனுஷ் நடித்து முடித்திருக்கும் படம் ராயன் இந்த படம் வருகிற ஜூன் மாதம் வெளிவர இருக்கிறது. இப்பொழுது தன்னுடைய 51வது படமான குபேரா வில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
நாகர்ஜுனா சொல்லியும் கேட்காமல் அசுரன் ஆடிய ஆட்டம்
திருப்பதி, ஆந்திராவில் ஏற்கனவே முதற்கட்ட படை பிடிப்பு நடந்து முடிந்தது. இந்த படத்தில் தனுசுடன் சேர்ந்து நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்றவர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் வருகிற 2024 தீபாவளி அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகர்ஜுனா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் இந்த படத்தில் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என ஒட்டுமொத்த சூட்டிங் ஸ்பாட்டையும் சென்டிமென்ட் சீன்களில் கண்கலங்க வைத்து விடுகின்றனராம்.
நாகார்ஜுனாவை விட தனுஷ் ஒரு படி மேலே சென்று மும்பையில் மிகவும் துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு குப்பை மேட்டில் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் முக கவசமும், கையுறைகள் இல்லாமலும் நடித்திருக்கிறார். நாகர்ஜுனா எவ்வளவோ சொல்லியும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று தனுஷ் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை காட்டியுள்ளார்.