வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

செல்வராகவனை நம்பி பிரயோஜனம் இல்ல.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் தனுஷ்

நடிகர் தனுஷ் இப்போது மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும் அவருக்கு பிள்ளையார் சுழி போட்டது செல்வராகவன் தான். ஆரம்பத்தில் அவருடைய இயக்கத்தில் தான் தனுஷ் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அதன் பின்பு சரியான இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

ஆனால் கடைசியாக தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் வெளியான நானே வருவேன் படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தனுஷின் சில படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதில் குறிப்பாக புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என நச்சரித்து வருகிறார்கள்.

Also Read: தனுஷுடன் இணையும் வடிவேலு.. சுயரூபம் தெரியாமல் சிக்கிய இயக்குனர்

மேலும் மீண்டும் செல்வராகவன் தன்னுடைய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக முன்பே கூறியிருந்தார். அதில் தன்னுடைய தம்பி தனுஷை தான் ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறினார். ஆனால் புதுப்பேட்டை படத்தை செல்வராகவன் கையில் எடுப்பதாக தெரியவில்லை.

இதனால் இனி அண்ணனை நம்பி பிரயோஜனம் இல்லை என தனுசே களத்தில் குதித்துள்ளார். அதாவது புதுப்பேட்டை 2 படத்தை தனுஷ் இயக்கி, நடிக்கவிருக்கிறார். மீண்டும் கொக்கி குமாரு போன்ற கதாபாத்திரத்தில் எப்போது தனுஷ் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்.

Also Read: வளர்த்து விட்ட காரணத்துக்காக பொறுத்து போகும் தனுஷ்.. ஓவர் வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

இப்போது புதுப்பேட்டை 2 படம் உருவாக இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இப்போது தனுஷ் இரட்டை வேடத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். கேப்டன் மில்லர் படம் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் உள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் தனுஷின் லையன் அப்பிள் வடசென்னை 2 படமும் உள்ள நிலையில் இப்போது புதுப்பேட்டை 2 படமும் இணைந்துள்ளது. இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தில் முன்னணி நடிகர்கள் இடம்பெறுவார்கள் என்ற கணிப்பும் உள்ளது.

Also Read: லியோ படப்பிடிப்புக்கு சைலண்டாக வரும் தனுஷ்.. ஒருவேளை அந்த கதாபாத்திரம் போல் இருக்குமா?

Trending News