Raayan: தனுஷ் ரசிகர்கள் மாத கணக்கில் ராயன் படத்திற்காக தவம் இருந்தனர். அதன் பலனாக இன்று உலக அளவில் வெளியாகி இருக்கும் இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.
அதிலும் இயக்குனராக தனுஷ் மிரள விட்டிருக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஏ ஆர் ரகுமானின் தாறுமாறான இசை பின்னி பெடல் எடுத்துள்ளது. இதனால் தியேட்டர்களில் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் காதை கிழிக்கிறது.
இப்படி கொண்டாடப்படும் ராயன் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளமும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்தின் இயக்குனரும் தனுஷ் தான்.
தனுஷின் ராயனுக்கு கிடைத்த வரவேற்பு
அந்த வகையில் அவருக்கு சன் பிக்சர்ஸ் 50 கோடிகளை சம்பளமாக தூக்கிக் கொடுத்திருக்கிறது. சில வருடங்களாகவே தனுஷ் படத்தின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. அதுவும் இந்த சம்பள உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.
மேலும் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது போல் சன் பிக்சர்ஸ் வசூல் வேட்டைக்கு தயாராகி வருகிறது. தற்போது படம் நாலா பக்கமும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ராயனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஏற்கனவே இதன் டிக்கெட் புக்கிங் 5 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து படம் முதல் நாளில் 10 கோடிகளை தாண்டி வசூலிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி அடுத்தடுத்த காட்சிகள் அனைத்துமே ஹவுஸ்ஃபுல்லாக தான் இருக்கும் என தெரிகிறது.
அதனால் முதல் நாளிலேயே ராயன் 20 கோடி வசூலை உலக அளவில் நெருங்கிவிடும் என பேசப்பட்டு வருகிறது. மேலும் வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல் அடுத்த வாரத்திலும் இந்த வசூல் வேட்டை அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ரசிகர்களின் பாராட்டு மழையில் ராயன்
- அடங்காத அசுரனாக வெளியான ராயன்
- தியேட்டரை விட்டு வெளியேறும் இந்தியன் 2
- போயஸ் கார்டன்ல நான் வீடு வாங்க கூடாதா.?