வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

இதெல்லாம் ஒரு கதைன்னு எடுத்துட்டு வரீங்க.. இயக்குனரை கடிந்த தனுஷ்

தனுஷின் சமீப கால படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. என்னதான் மாஸ் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் இந்த மாதிரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்கள் தான் தனுஷின் சினிமா கேரியரை பெரிதும் உதவி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

இதை தனுஷ் இடமே கேட்டாலும் ஆமாம் என்றுதான் சொல்லுவார். இருந்தாலும் அவ்வப்போது இடையில் படம் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என தன்னுடைய இமேஜை தக்க வைத்துக் கொள்ள மாஸ் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் தனுஷ். தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ். தனுஷ் இயக்குனராகவும் மாறிவிட்டதால் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களின் கதைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அப்படியே மூஞ்சிக்கு சொல்லி விடுகிறாராம். இதனால் தற்போது தனுசுக்கு கதை சொல்லவே பலருக்கும் அல்லு விடுகிறதாம்.

அப்படித்தான் கடந்த மூன்று வருடமாக ஒரு இயக்குனர் தனுசுக்கு கதையை எழுதிக் கொண்டிருப்பதாக சொல்லி அவரை கடுப்பேற்றி உள்ளார். தனுசு மூன்று வருடமாக இவர் இன்று கதையை சொல்லி விடுவார் நாளை கதையை சொல்லி விடுவார் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் கதையில் திருத்தங்கள் சொல்லியும் செய்யாமல் அப்படியே வந்து நின்றதால் கடுப்பான தனுஷ் இதெல்லாம் ஒரு கதை இதில் நான் நடிக்க வேண்டுமென மூஞ்சிக்கு நேரே சொல்லி அனுப்பிவிட்டாராம்.

asuran-dhanush-cinemapettai
asuran-dhanush-cinemapettai

இதை கவனித்து வந்த சீக்கிர நடிகர் அந்த இயக்குனரை வளைத்து தன் பக்கம் வைத்துக் கொண்டதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் உலாவருகிறது. விரைவில் அந்த இயக்குனருடன் தனுஷுக்கு எழுதிய கதையில் அவர் நடிக்கப்போகும் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

Trending News