சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

புத்தாண்டு உடன் பிறந்த நாளையும் கொண்டாடிய ஐஸ்வர்யா தனுஷ் புகைப்படங்கள்.. டபுள் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன். இவரது படத்திற்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அந்த அளவிற்கு தனது படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை வெற்றியாக்கிவிடுவார்.

இவரது இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாகும்.

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் கார்த்திக் பதிலாக தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அந்த படத்தினை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

dhanush
dhanush

நேற்று புத்தாண்டு தினத்தை அனைத்து பிரபலங்களும் வெகுவிமர்சையாக கொண்டாடினர். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021 புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

selvaraghavan geethanjali
selvaraghavan geethanjali

அதுமட்டுமில்லாமல் நேற்று தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாக்கும் பிறந்தநாள் என்பதால் புத்தாண்டையும், பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடியுள்ளனர். 5 வருடத்திற்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

dhanush aishwarya
dhanush aishwarya

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜி வி பிரகாஷ் கலந்து கொண்டுள்ளார்.

gv prakash kumar
gv prakash kumar

Trending News