திரை வாழ்க்கையில் பல சாதனைகள் படைத்தாலும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருபவர் நடிகர் தனுஷ். சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் என்றால் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து தான்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து மனமொத்த பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ன என்று இணையத்தில் பல செய்திகள் உலாவ தொடங்கியது.
இந்நிலையில் தற்போது ஒரு வழியாக இந்த செய்தியை மக்கள் மறந்துயுள்ளனர். இந்நிலையில் மீண்டும் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பூதாகர விஷயம் வெடித்துள்ளது. அதாவது பல வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது அப்போது பெரிய பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் பல்வேறு ஊடகங்களிலும் தன் மகன் தனுஷ் என்று அந்த தம்பதியினர் கூறிவந்தனர். மேலும் தனுஷுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற வாதங்கள் எல்லாம் அப்போது முன்வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து மதுரைக் கிளை அந்த வழக்கை ரத்து செய்தது.
இப்போது கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் திடீரென ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதாவது தங்களை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொலை செய்ய முயன்றதாகவும், நீதிமன்றங்களில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இதனால் தனுஷ் கோபமடைந்து இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பியதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் மீது 10 கோடி கேட்டு மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என நடிகர் தனுஷும், அவரது தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் கதிரேசன் தம்பதியினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.