வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

ஷங்கர், தனுஷ் இருவரையும் மிரள வைத்த இளம் இயக்குனர்.. அசுரனுக்கு தீனி போட கதை ரெடி

சமீப காலமாக டைரக்டர் ஷங்கர் ஒரு இயக்குனரை மட்டும் டார்கெட் செய்து வருகிறார். அனைவரிடமும் அவர் நல்ல திறமையுள்ள இயக்குனர், வருங்காலத்தில் நல்ல இடத்தை பிடிப்பார் என பாராட்டி பேசி வருகிறாராம். பல ஹீரோக்கள் அந்த இயக்குனரை தேடி வருகிறார்கள்.

லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இவர் தான் இப்பொழுது கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் முதல் சூர்யா வரை தங்களுக்கு கதை ரெடி பண்ணுமாறு தமிழரசனிடம் கேட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் தனுசுக்கு கதை கூறியிருக்கிறார் தமிழரசன். அதைக் கேட்டு மிரண்டு போன தனுஷ் தயாரிப்பாளருக்கு போன் போட்டு இந்த படத்தை முதலில் பண்ணலாம் என கூறி இருக்கிறார். இவர் நல்ல டேலண்டான இயக்குனர் இவரை மிஸ் பண்ண வேண்டாம் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார்.

ஏற்கனவே லப்பர் பந்துக்கு பின் அதே கூட்டணியில் மற்றொரு படம் எடுக்கவும் திட்டமிட்டு வருகிறார் தமிழரசன். சுமார் 8 கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம் 50 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது. இதனாலையே மொத்த கோடம்பாக்கமும் தமிழரசன் மீது ஒரு கண் வைத்துள்ளது.

தனுஷ் இட்லி கடை படத்தை முடித்த பின் இந்த இயக்குனருடன் கூட்டணி போடுகிறார். இட்லி கடை திரைப்படத்தின் சூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்ற வருகிறது. இதை தனுஷ் தனது நான்காவது படமாக இயக்கி வருகிறார். இப்பொழுது தனுஷ் மற்றும் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறார்கள்.

Trending News