திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வாத்தி திரைப்படம் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவான இந்த திரைப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

ஏனென்றால் இப்படத்தில் தெலுங்கு வாடை அதிகம் இருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இருப்பினும் தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடத்தான் செய்கின்றனர். ஆனாலும் வாத்தி திரைப்படம் தமிழில் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை. ஆனால் தெலுங்கில் இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Also read: அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

அந்த வகையில் வாத்தி திரைப்படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 12 கோடி வரை கல்லாகட்டி இருக்கிறது. இது இனிவரும் நாட்களிலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இப்போது தனுசுக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வாத்தி படத்தை பார்க்க தெலுங்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.

இதிலிருந்தே தனுசுக்கு தெலுங்கில் எந்த அளவுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது என்பது தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு ஆசையில் தெலுங்கு பக்கம் சென்ற விஜய்க்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர் நடித்த வாரிசு பொங்கலுக்கு வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் தமிழில் நன்றாக வசூலித்திருந்தாலும் தெலுங்கில் எதிர்பார்த்த அளவு கல்லா கட்டவில்லை.

Also read: அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

மேலும் வாரிசு தெலுங்கில் மொத்தமாகவே 12 கோடி மட்டும்தான் வசூலித்திருந்தது. அதனாலேயே அடுத்ததாக வெளிவர இருந்த வாத்தி திரைப்படம் கல்லா கட்டாது என்ற ஒரு பேச்சும் அடிபட்டது. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் அடித்து நொறுக்கிய வாத்தி தெலுங்கில் பட்டையை கிளப்பி வருகிறது. இதன் மூலம் தனுஷ் விஜய்யை ஓரம் கட்டி முன்னேறி இருக்கிறார்.

ஏனென்றால் தெலுங்கு திரை உலகில் தனி முத்திரை பதிக்கும் நோக்கத்துடன் விஜய் அங்கு களமிறங்கினார். ஆனால் அவர் போட்ட திட்டம் அனைத்தும் தவிடு பொடியானது. அந்த வகையில் தனுஷ் சத்தமே இல்லாமல் தெலுங்கில் தனக்கான ஒரு முத்திரையை பதித்து விட்டார் என்பதுதான் உண்மை. ஏற்கனவே ஹாலிவுட், பாலிவுட் என புகழ்பெற்றுள்ள தனுஷ் தெலுங்கிலும் நினைத்ததை சாதித்திருக்கிறார்.

Also read: சும்மா பறந்து பறந்து அடித்தும் வாய்ப்பு தராத லோகேஷ்.. ஏஜென்ட் டீனா போல் லியோ வில் சான்ஸ் கேட்ட நடிகை

Trending News