எல்லாத்துறைகளிலும் உள்ள நண்பர்களைப் போலவே திரைத்துறையிலும் சிலர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட்டில் நகமும் சதையுமாக இருக்கும் நண்பர்கள்தான் தனுஷும் சிவகார்த்திகேயனும் இருவரது நட்பைப் பற்றியும் தனியாக பேச தேவையில்லை.
ஏனென்றால் சிவகார்த்திகேயனை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களை தனது தயாரிப்பில் தயாரித்து நட்பை திரையுலகினர் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டினார் தனுஷ்.
இந்த நிலையில் தனுஷும் சிவகார்த்திகேயனும் நேருக்கு நேர் மோத போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அது எந்த வகையில் என்றால் இருவருடைய படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளது.
அதாவது தனுஷின் கர்ணன் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் வருகின்ற தமிழ் புத்தாண்டன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளதாம்.
அதுமட்டுமில்லாமல் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே உள்ள நட்பு முன்னர் போல் இல்லை என்றும் சில வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
எனவே தனுஷ் சிவகார்த்திகேயன் இருவருக்கிடையேயான ரேஸில் ஜெயிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.