Dhanush sketched 100 crores for Ilaiyaraaja movie: தமிழ் சினிமாவை இசையால் ஆட்சி செய்தவர் இசைஞானி இளையராஜா ஆவார். அசாத்திய திறமையால் தமிழர்களை இசைக்குள் கட்டிப்போட்ட இந்த கலைஞனின் வாழ்க்கை படமாக போகிறது.
“இளையராஜாவின் பயோபிக் என்பது எனது வாழ்நாள் கனவு” என்று கூறியுள்ளார் தனுஷ். இளையராஜாவின் பயோ பிக்கை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தனுஷ்.
தமிழ் சினிமாவில் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்து, ஆன்மீகத்தை இறுதிவரை போற்றி பாதுகாக்கும் இந்த கலை உலக சாமியார்,
தனது பயோ பிக்கிற்கு ஓகே சொல்ல அவரது அனுமதியின் பெயரில் அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.
கமலஹாசன் திரைக்கதை எழுத அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிப்பதாக உள்ளது.
கமலின் திரைக்கதை என்பது சற்று உயர்ந்த தரத்தில் இருக்கும் என்றும், ரசிகர்கள் அவர் கதையை அனுபவிக்க முடியாது என்றும் பல காரணங்கள் கூறி கமலஹாசனை கழட்டிவிட்டார் தனுஷ்.
பெயரளவுக்கு அனைவரையும் வைத்துவிட்டு கதை, இயக்கம் எனமுழு பொறுப்பையும் தன் கைக்குள் அடக்கி இளையராஜா படத்தின் மொத்த வேலைகளையும் ஒரே ஆளாக செய்து வருகிறார் தனுஷ்.
தேனியில் ஆரம்பித்த இளையராஜாவின் கதை அமெரிக்கா வரை சென்று புகழ் பாடியுள்ளதை ஒரு பாகத்தில் எடுக்க முடியாது எனவும் இரண்டு பாகம் கண்டிப்பாக வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளார் தனுஷ்.
ஒரு பாகத்திற்கு 50 கோடி என இரண்டு பாகத்திற்கு 100 கோடி கணக்கு போட்டு வைத்துள்ளார் தனுஷ்.
இளையராஜாவின் மூலம் பெயர், புகழ் அனைத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்பதே தனுஷின் பிளானாக உள்ளது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதால், இளையராஜாவிற்கு நெருக்கமான பல கதாபாத்திரங்களை உள்நுழைக்க உள்ளார் தனுஷ்.
அது மட்டும் இன்றி இளையராஜாவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த திரையுலக ஜாம்பவான்கள் மணிரத்தினம், வைரமுத்து போன்றவர்களின் கதாபாத்திரங்களுக்கு மாதவன் மற்றும் விஷால் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது.