வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரஜினி விட்ட சாபத்தால் நெருப்பில் நிற்கும் தனுஷ்.. மாளிகையில் இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை என புலம்பல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருடங்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதத்துடன் நடிகர் தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். தன்னை விட தனுஷ் 2 வயது சிறியவர் என்றாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை காதலித்ததால் ரஜினியும் சம்மதம் தெரிவித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.

மேலும் தனுஷ், ரஜினியின் மாப்பிள்ளை ஆனவுடன் பல பட வாய்ப்புகள், விலை மதிப்புமிக்க ருத்ராக்ஷம் என ரஜினியால் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்தனர். இவர்களது விவாகரத்து ரசிகர்களை அதிருப்தியடைய செய்த அதே நேரத்தில், ரஜினியும் தனது மகளின் வாழ்க்கையை நினைத்து நொந்து போனார்.

Also Read: பண்பு தவறாத மனிதரை வில்லனாக நடிக்க கூப்பிட்ட தனுஷ்.. உன் சகவாசமே வேணானு தலைத்தெறிக்க ஓடிய கானா புகழ்

அதன் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிக்காந்த் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து தற்போது லால் ஸலாம் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார். இப்படி தனுஷின் நினைவுகளிலிருந்து மீண்டு வர ரஜினியும், ஐஸ்வர்யாவும் பல வேலைகளை செய்து வரும் நிலையில், தனுஷும் பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் தற்போது தனுஷால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விவாகரத்துக்கு பின்னர் தனுஷ் தனது இரண்டு மகன்களையும் தனது பட ப்ரோமோஷன்களுக்கு அழைத்து செல்வது என அவ்வப்போது அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை அவரே இயக்கி, நடிக்க உள்ள நிலையில், பட வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

Also Read: தாத்தா சாயலில் இருக்கும் தனுஷ் மகன் யாத்ரா.. அப்பா, அம்மாவை மிஞ்சிய உயரம், வைரலாகும் ஃபோட்டோ

இதன் காரணமாக இரண்டு மகன்களும் தனது தாயான ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இருந்து வருகின்றனர். அண்மையில் குடும்ப விழாவின் போது தன்னை விட வளர்ந்து நின்ற தனது மூத்த மகனான யாத்ராவை பார்த்து பெருமைப்படும் படியான புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி மகன்களை கண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் இருந்து வரும் நிலையில், தற்போது நடிகர் தனுஷ் பெரும் சோகத்தில் உள்ளாராம்.

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அருகில், ஒரு இடம் வாங்கி கிட்டத்தட்ட 200 கோடி மதிப்பிலான பிரம்மாண்டமான அரண்மனை வீட்டையே கட்டி அங்கு தனுஷ் வசித்து வருகிறார். ஆனால் அந்த மாளிகை வீட்டில் தனது மகன்கள், மனைவி இல்லாமல் தனுஷ் கவலையில் உறைந்து போயுள்ளாராம். இதன் காரணமாக படப்பிடிப்புகளில் கூட சோகமாகவே காணப்படுகிறாராம். இப்படி தனுஷ் தனியாக அவதிப்பட்டு வாழ்வதற்கு காரணம் ரஜினி விட்ட சாபம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: மாமனார், மருமகன் இடையே நடக்கும் போட்டி.. ஒரே நடிகரை டார்கெட் செய்யும் ரஜினி, தனுஷ்

Trending News