ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் என எங்கு சென்றாலும் தனுசு படங்கள்தான் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்களின் பிரபலமானவர் இயக்குனர் ராம்குமார். இவர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தனுஷிடம் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். ஆனால் தனுஷ் இப்படத்தின் கதை ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறது என வெளிப்படையாக இயக்குனரிடம் கூறியுள்ளார்.
மேலும் தனுஷ் தனது உடன் பணியாற்றும் சினிமா பிரபலங்களுடன் இப்படி ஒரு கதை இருக்கிறது இந்த கதை எங்கேயாவது பார்த்த மாதிரி உங்களுக்கு தோன்றுகிறதா என ராம்குமார் கூறிய கதையை தனது சினிமா பிரபலங்களிடம் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் கதை எந்த படத்தின் சாயலில் இருக்கிறது என கண்டறிந்து தனுஷிடம் கூறியுள்ளனர்.

இதனால் தனுஷ் இயக்குனர் ராம்குமார் நீங்க சொன்ன கதை இந்த படத்தின் சாயலில் இருக்கிறது. அதனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். 3 வருடமாக கதையை எழுதி வந்த ராம்குமாருக்கு தனுஷ் இந்த மாதிரி கூறியது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் தனுஷ் தற்போது பேன் இந்தியாவாக பல படங்கள் நடித்து வருகிறார்.
அதனால் வேறொரு படத்தின் சாயலில் இருக்கும் கதையில் நடித்தால் தனுசுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தான் இயக்குனரிடம் படத்தின் கதையை ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் என கூறியதாக தனுஷ் நண்பர்கள் கூறியுள்ளனர். ஆனால் இயக்குனர் ராம்குமார் 3 வருடமாக எழுதிய கதையை மாற்றங்கள் செய்ய விருப்பம் இல்லாததால் இந்த கதை யாரு சம்மதிக்கிறார் என யோசித்து சிவகார்த்திகேயனிடம் படத்தின் கதையை பற்றி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இப்போது வரை சிவகார்த்திகேயன் ராம்குமார் படத்தினை பற்றி எந்த ஒரு தகவலையும் கூறவில்லை ஆனால் கூடிய விரைவில் சிவகார்த்திகேயனுக்கு ராம்குமாரும் இணைந்து பணியாற்றுவார்கள் என சினிமா பிரபலங்கள் கூறி வருகின்றனர்.