வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த நேஷனல் அவார்டை தட்டி தூக்க போகும் தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற விட்ட பிரபலம்

கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கும் தனுஷ் அடுத்த நேஷனல் அவார்டுக்கு தயாராகிவிட்டார் என்று பிரபலம் ஒருவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் நேஷனல் அவார்டை தட்டி தூக்கிய நிலையில் அடுத்ததாக தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் அவருடைய தோற்றத்தை வைத்து பார்க்கும்போதும், அந்தப் படத்தைப் பற்றி சிலர் சொன்ன தகவலின் அடிப்படையிலும் பார்த்தால், கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

Also Read: கிடப்பில் போட்ட கதையை கையில் எடுத்த தனுஷ்.. பாகுபலி போல் தாக்கத்தை ஏற்படுத்த போகும் படம்

கேப்டன் மில்லர் திரைப்படம் 1930-40 காலகட்டத்தின் பின்னணியை கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இதில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், டேனியல் பாலாஜி, நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Also Read: திட்டம் போட்டு வலை விரித்த தயாரிப்பாளர்.. சரியான நேரம் பார்த்து எஸ்கேப் ஆன தனுஷ்

அதன் பின் வெளியான மேக்கிங் வீடியோவும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக தனுஷின் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி ரிலீசாக உள்ளதால் இந்த படத்தை பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் தனுஷ் நிச்சயம் கேப்டன் மில்லர் படத்திற்காக நேஷனல் அவார்ட் வாங்குவார் என திரை அனுபவம் மிக்க விமர்சகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருப்பது, அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்திருக்கிறது.

Also Read: 15 படங்கள் நடித்தும் பிரயோஜனம் இல்ல.. கிடைத்த வாய்ப்பை தட்டி பறித்த தனுஷ்

Trending News