NEEK Movie Twitter Review: தனுஷ் இயக்கி தயாரித்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. முழுக்க முழுக்க இளம் பட்டாளங்களை வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

அதுவும் ட்ரைலரில் படத்தை ஜாலியா வந்து ஜாலியா பாத்துட்டு போங்க என தனுஷ் சொல்லி இருந்தார். அதற்கு ஏற்றது போல் காட்சிகளும் இருந்தது.

மேலும் பிரமோஷனும் ஜோராக நடந்தது. அந்த வகையில் தற்போது படத்தை பார்த்த சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷ் சொன்ன மாதிரி ஜாலியா பார்க்கலாமா.?
அதில் படம் முழு எண்டர்டெயின்மென்ட் ஆக இருக்கிறது என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை தனுஷின் திரைக்கதை அனைத்துமே பலம் தான்.

அதற்கேற்றார் போல் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கோல்டன் ஸ்பேரோ பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும்.

அதேபோல் மேத்யூ தாமஸ் ஃபன் செய்துள்ளார். அவர் வரும் காட்சிகளை ரசித்து சிரிக்கலாம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இப்படியாக படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இருப்பினும் முதல் நாள் வசூல் தான் வெற்றியை நிர்ணயிக்கும்.