வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2 வருஷம் பக்கமே வந்துராதீங்கன்னு விரட்டிவிடும் தனுஷ்.. செல்வராகவனும் கூட வெயிட்டிங் இன் க்யூ

தனுஷ் 2026 வரை கடும் பிஸியாக இருக்கிறார். யாருக்கும் இவரது கால் சீட் கிடையாது. தற்சமயம் கையில் 6 படங்கள் வைத்திருக்கிறார். அதனால் இயக்குனர்கள் யார் வந்தாலும் தயவு செய்து இரண்டு வருடங்கள் காத்திருங்கள் என கூறி அனுப்புகிறாராம்.

ராயன், குபேரன், போன்ற படங்கள் நடித்து முடித்து இருக்கிறார். இதுபோக இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படி கடும் பிஸியாக இரவும் பகலும் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கார கூட புறநானூறு படத்துக்காக இவரை அணுகியிருக்கிறார் அவருக்கும் நோ சொல்லிவிட்டாராம்.

இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 என அடுத்தடுத்து இரண்டாம் பாகம் படங்கள் லைன் அப்பிள் வைத்திருக்கிறார். ஏஜிஎஸ், லைக்கா போன்ற பெரிய நிறுவனங்களை கூட தனுஷ் இப்பொழுது டீலில் விட்டு வருகிறாராம்.

செல்வராகவனும் கூட வெயிட்டிங் இன் க்யூ

தற்போது ஒரு நாளைக்கு ஒரு கோடி என சம்பளம் வாங்கி வருகிறார். 50 நாட்கள் கால் சீட் என்றால் 50 கோடிகள் வாங்குகிறாராம். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கேப்டன் மில்லர். அந்த படத்திற்கு முதலில் 60 நாட்கள் தான் கால் சீட் கொடுத்தாராம் ஆனால் 120 நாட்கள் வரை எடுத்துக் கொண்டதால் இந்த மாதிரி நாள் சம்பளமாக மாற்றிவிட்டார்.

ராயன் படம் முழுவதும் முடிந்து விட்டது, கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது. அதன் பின் இளையராஜா பயோபிக் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்சமயம் 40 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார்.இந்தப் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறனின் வட சென்னை அல்லது அண்ணன் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் 2 படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News