திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விவாகரத்து கற்றுக் கொடுத்த பாடம்.. ஞானியாய் மாறி ரஜினி பாதையில் செல்லும் தனுஷ்

Actor Dhanush: சமீபகாலமாகவே தனுஷின் நடவடிக்கைகள் பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும் மறுபக்கம் தன் பிள்ளைகளுடனும் இவர் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் விவாகரத்திற்கு பிறகு இவர் பல விஷயங்களில் மாறி இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படி என்றால் தனுஷ் இப்போதெல்லாம் ஷூட்டிங் இல்லாத நாட்களில் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. சில வருடங்களுக்கு முன்பு வரை இவர் பார்ட்டிக்கு செல்வது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என ஜாலியாக தான் இருந்தார். ஆனால் இப்போது புதுமையான ஒரு பழக்கத்தை பின்பற்றி வருகிறாராம்.

Also read: 50 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத ரஜினியின் தங்கை.. காதல் தோல்வியால் எடுத்த முடிவு

அது என்னவென்றால் தனுஷ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இலக்கியங்கள், நாவல்கள் என புத்தகங்களாக வாங்கி படித்துக் கொண்டிருக்கிறாராம். இதற்காகவே அவர் லட்ச கணக்கில் செலவு செய்து வருகிறார். இதன் மூலம் அவர் முழுதாக பக்குவப்பட்டவராகவும் மாறிக் கொண்டிருக்கிறாராம்.

இந்த பழக்கம் நம் தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஹீரோக்களுக்கு கிடையாது. கமல், ரஜினி உட்பட சில நடிகர்கள் தான் இது போன்று படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் தனுஷ் தன்னுடைய முன்னாள் மாமனார் வழிக்கு மாறி வருவது வெளிப்படையாகவே தெரிகிறது.

Also read: கொல மாசாக இருக்கும் தனுஷ் 50 பட டைட்டில்.. சத்தமே இல்லாமல் நடத்திய பூஜை

அதிலும் சமீப காலமாக அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர் பேசுவதை பார்க்கும் போது அப்படியே ரஜினி போல் இருக்கிறது என பலரும் கூறி வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய பேச்சில் ஒரு முதிர்ச்சி இருக்கிறது. அதற்கேற்றார் போல் அவரும் ஆன்மீக பயணம் செய்வது போன்ற விஷயங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பக்குவம் அனைத்துமே புத்தகத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது தான். அந்த வகையில் விவாகரத்து தனுஷை இந்த அளவுக்கு மாற்றி இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் பாதையை பின்பற்றி வரும் இவர் இன்னொரு ரஜினி ஆகவே வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்.

Also read: தளபதியை பற்றி யாருக்கும் தெரியாத 6 விஷயம்.. அஜித், விஜய்க்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா.?

Trending News