Dhanush – Aishwarya Rajinikanth: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட போது ஒட்டுமொத்த மீடியாவும் அவர்கள் மீதுதான் இருந்தது. இரண்டு குழந்தைகள், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை என்று சென்று கொண்டிருந்த இவர்கள் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன் பின்னர் இருவரும் தங்களுடைய பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தனுஷ் ஒரு பக்கம் நடிப்பு, இயக்கம் என பிசியாகிவிட்டார். அதேபோன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்கு பின்பு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரையும் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்த தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் கேமியோ ரோலுக்கு கொண்டு வந்து, லால் சலாம் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
Also Read:இந்த வாரம் தியேட்டர், ஓடிடியை குறி வைக்கும் படங்கள்.. மொய்தீன் பாயோடு போட்டி போடும் கேப்டன் மில்லர்
விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு பிள்ளைகளுக்காக ஒரு சில நிகழ்ச்சிகளில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். அதேபோன்று தனுஷ் தன்னுடைய பட விழாவிற்கு மகன்களை அழைத்து சென்றார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் நடைபெற்ற லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கும் தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்து வந்திருந்தார். இப்படி ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்தாமல் பரஸ்பர பிரிவில் இருந்து வருகிறார்கள்.
ட்வீட் போட்டு இருக்கும் தனுஷ்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. நடிகர் தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ட்ரெய்லர் லிங்கை பகிர்ந்து, லால் சலாம் பட குழுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். எந்த ஒரு மனக்கசப்பும் இன்றி தனுஷ் தன்னுடைய முன்னாள் மனைவியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நேற்று வெளியாகி இருந்த லால் சலாம் படத்தின் டிரைலரும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முந்தைய படங்களான 3 மற்றும் வை ராஜா வை படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை இந்த படம் கொண்டிருப்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. விளையாட்டு, அரசியல் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
கூட்டம் சேர்க்கறவனை விட ஒருத்தன் பின்னாடி கூட்டம் கூடுதுனா அவன் ரொம்பவும் ஆபத்தானவன், பிள்ளை சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, அதே பிள்ளை சாதிச்சா நாட்டுக்கு பெருமை, எந்த மதமா இருந்தா என்ன எல்லா சாமியுமே ஒரே சாமி தான், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை மனிதாபிமானத்தை அதுக்கு மேலே வை போன்ற வசனங்கள் லால் சலாம் ட்ரெய்லரில் இடம்பெற்று இருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக எகிற வைத்திருக்கிறது.