சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

தனுஷின் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவருடைய நானே வருவேன் திரைப்படம் வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் தான் இயக்கி இருக்கிறார். இதை அடுத்து அவர் தொடர்ச்சியாக மூன்று தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படபூஜை சமீபத்தில் நடைபெற்றது.

Also read: அக்கட தேசத்து படங்களில் அதிகமாக கல்லாக கட்டும் தனுஷ்.. பட பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக வந்த அடுத்த அறிவிப்பு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இப்படி தனுஷ் அடுத்தடுத்ததாக தெலுங்கில் கவனம் செலுத்தி வருவது இங்கிருக்கும் இயக்குனர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. எதற்காக அவர் இப்படி தெலுங்கு திரைப்படத்திலேயே நடிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

ஆனால் இதற்குப் பின்னணியில் இருப்பது டாக்டர் நடிகையான சாய்பல்லவி தான். அவர்தான் தெலுங்கு இயக்குனர்களிடம் தனுசுக்காக சிபாரிசு செய்து பட வாய்ப்புகளை வாங்கி கொடுக்கிறாராம். இதை வைத்து பார்க்கும் பொழுது தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு இருப்பவர்களை மறந்துவிட்டு தெலுங்கு தேசத்திலேயே செட்டில் ஆகி விடுவார் என்று பேசிக் கொள்கின்றனர்.

Also read: காலை வாரிவிட்ட விஜய்.. நான் இருக்கிறேன் என கைதூக்கி விட்ட தனுஷ்

தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து நண்பர்கள், சொந்த பந்தங்கள் என்று அனைத்தையும் ஒதுக்கி வருகிறார். யாருடனும் பேசாமல் அமைதியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் சாய்பல்லவியின் பேச்சை தட்டாமல் கேட்டு வருவது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. மேலும் மிகப்பெரிய நடிகராக இருக்கும் அவர் நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சாய்பல்லவி கூறும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்து வருகிறார். இப்படி அவர் சென்னையில் இருப்பதை விட ஹைதராபாத்தில் இருக்கும் நாட்கள் தான் அதிகமாக இருக்கிறது. இதை பார்த்து இப்போது தனுஷின் ரசிகர்கள் தான் அதிக குழப்பத்தில் இருக்கின்றனர்.

Also read: சினிமாவிற்கு முழுக்கு போடும் மலர் டீச்சர்.. துக்கத்திலும் ஒரு சந்தோசமான செய்தி

Trending News