தளபதி விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல் சினிமா துறையில் உள்ள பல பிரபலங்களுக்கும் விஜய் பேவரைட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த லிஸ்டில் புதிதாக 2 தனுஷ் பட இயக்குனர்களும் இணைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு முன்னணியில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இதை பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதேசமயம் உயிர் பயத்தை காட்டிய கொரானா சர்ச்சை இருந்தபோதும்கூட மாஸ்டர் படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
இதுவே விஜய்க்கு தமிழ்நாட்டில் எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டியது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை பல பிரபலங்கள் விருப்பமான நடிகராக தேர்வு செய்துள்ளனர்.
என்னதான் விஜய் 24 மணி நேரமும் குடிக்கும் JD கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் விஜய்யின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதற்கு ஏற்றார் போல் அனிருத் அந்தக் கதாபாத்திரத்திற்கு அமைத்த பிஜிஎம் இன்று வரை பலரது ரிங்டோனாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இரண்டு இளம் இயக்குனர்கள் விஜய்யின் தீவிர ரசிகர்களாக மாறிவிட்டனர். அதில் ஒருவர் மாரி செல்வராஜ்.
இவர் அந்தக் காலத்திலிருந்தே விஜய் படம் மட்டும் தான் பார்ப்பாராம். மாரி செல்வராஜ் விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது தனுஷின் D43 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கார்த்திக் நரேன் மாஸ்டர் படத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
