வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இட்லி கடை ரிலீஸ் தேதியை லாக் செய்த தனுஷ்.. அடுத்தடுத்து குவியும் அப்டேட்

Dhanush-Idlikadai: அடுத்த ஐந்து வருடங்களுக்கு தனுசை கையிலேயே பிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் நடிப்பு இயக்கம் என நிற்க நேரமில்லாத அளவுக்கு பிசியாக இருக்கிறார். கடைசியாக அவர் இயக்கி நடித்த ராயன் நல்ல வரவேற்பு பெற்றது.

idlikadai
idlikadai

அதை அடுத்து தற்போது அவருடைய கைவசம் குபேரா, இட்லி கடை, D 55 படங்களை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என பல படங்கள் இருக்கிறது. அதில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் தற்போது அறிவித்துள்ளார்.

அவருடைய 52 ஆவது படமான இதை அவர் இயக்கி நடித்தது மட்டுமல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். அவருடன் இணைந்து டான் பிக்சர்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இட்லி கடை ரிலீஸ் தேதியை லாக் செய்த தனுஷ்

மேலும் தனுசுடன் நித்யா மேனன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். ஏற்கனவே இவர்களுடைய கெமிஸ்ட்ரியில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதனாலயே இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் அடுத்த வருட தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என செய்திகள் கசிந்தது. ஆனால் தற்போது தனுஷ் ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறையை குறி வைத்துள்ள இப்படம் நிச்சயம் வசூலில் கலக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். அதேபோல் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் இணையும் படத்தின் பூஜையும் இன்று நடைபெற்றுள்ளது. இப்படியாக அவருடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குவிந்த வண்ணம் உள்ளது.

Trending News