வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

நீண்ட தாடி, முடியுடன் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தனுஷ்.. ஏர்போர்ட்டில் சும்மா கெத்தாக வந்த நியூ லுக்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் பீரியட் ஆக்சன் அட்வெஞ்சராக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் மாத கணக்கில் எடுக்கப்பட்டு வரும் இப்படம் அவ்வப்போது பல சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் கிராமப்புறங்களிலும், வனப்பகுதிகளிலும் சூட்டிங் நடைபெற்று வருவதால் பல எதிர்ப்புகளும் கிளம்பியது.

Also read: 2 முறை வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட தனுஷ்.. ஒரே படத்தால் இயக்குனரின் சோலியை முடித்த ஜெயம் ரவி

இருப்பினும் படத்தை விரைவில் முடித்து வெளியிட வேண்டும் என்று பட குழுவினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தில் தனுஷின் தோற்றம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாகவே அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.

நீண்ட தாடி, முடியுடன் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தனுஷ்

dhanush-captain-miller
dhanush-captain-miller

அதிலும் கேப்டன் மில்லருக்காக அவர் முனிவர் மாதிரி நீண்ட தாடி, தலைமுடி என மாறி இருப்பது மீதான ஆவலை அதிகப்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது அவர் மும்பை ஏர்போர்ட்டில் சும்மா கெத்தாக வந்து இறங்கிய வீடியோக்களும், போட்டோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய அனுஷ்கா.. தேவசேனாவுடன் தனுஷ் செய்த தரமான சம்பவம்

பிங்க் கலர் முழு கை டீ சர்ட், கண்ணாடி என அவர் ஸ்டைலாக வந்ததை பார்த்த ரசிகர்கள் உடனே அவருடன் இணைந்து போட்டோவும் எடுத்துக் கொண்டனர். தனுஷும் எந்த விதமான அசௌகரியமும் படாமல் அனைவருக்கும் போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

இதைத்தான் தற்போது தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது அவர் கேப்டன் மில்லரா அல்லது கில்லரா என்ற ரேஞ்சில் கமெண்ட்டுகள் பறந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அவருடைய ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் இந்த கேப்டன் மில்லரின் புது லுக் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: எல்லாமே அட்டு பிளாப், நீங்கெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்ல.. படுதோல்வியை சந்திக்கும் தனுஷ் பட நடிகை

Trending News