வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அந்த விஷயத்தில் செல்வராகவனை பின்பற்றும் தனுஷ்.. அதிரடியாக போட்ட கண்டிஷன்

தற்போது தனுஷ் சொந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு முழுவீச்சில் சினிமாவில் செயல்பட்டு வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படமும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கொடுக்காத நிலையில் அசுரன் படத்தைப்போல் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படமும், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இப்படம் டார்க் காமெடியாகவும், ஆக்சன் சாகசங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை 60 நாட்களிலேயே எடுத்த முடிக்க வேண்டும் என தனுஷ் கட்டளையிட்டுள்ளார். ஏனென்றால் இப்படத்திற்கு பிறகு கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம்.

இந்தப் படம் தனுஷின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் அன்புச்செழியன் தயாரிக்கும் இப்படத்தை தனுஷ் இயக்கி, நடிக்கிறாராம். ராஜ்கிரன், ரேவதி நடிப்பில் கடந்த 2017ல் வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கி இருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின்பு, படங்களை இயக்காமல் இருந்த தனுஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே தனுஷ் குடும்பத்தில் அப்பா, அண்ணன் இயக்குனராக உள்ள நிலையில் தனுஷும் படங்களை இயக்கி வருகிறார்.

ஏற்கனவே கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தனுஷுக்கு பல உதவிகள் செய்துள்ளார். அவருக்கு நன்றிக்கடன் செய்யும் விதமாக தனுஷ் தற்போது அவரது தயாரிப்பில் இந்த படத்தை இயக்கி கொடுக்க உள்ளார். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News