திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கீர்த்தி சுரேசை 3 நாளாக டார்ச்சர் செய்த தனுஷ்.. ரஜினிக்கு பறந்த போன் கால், வெளிவந்த ரகசியம்!

Dhanush: நடிகர் தனுசுக்கு சர்ச்சைகளின் நாயகன் என்று ஆஸ்கார் அவார்டு கூட கொடுத்து விடலாம். இவரை சுற்றி நடக்காத பிரச்சனைகளே இல்லை என்று சொல்லலாம். அப்படிதான் தற்போது தனுஷுக்கும், கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை என்று கூறி ஒரு விஷயம் வெளியில் வந்திருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் ஹீரோக்களிடம் நட்பாக பழகக்கூடிய கதாநாயகி. அவர்கள் பகடி செய்தால் கூட கீர்த்தி சுரேஷ் அதை ரொம்ப சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள மாட்டார். அப்படி இருக்கும் பட்சத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இடையே அப்படி என்ன வாய்க்கா தகராறு நடந்திருக்கும் என்று எல்லோருக்குமே கேள்வி இருக்கும்.

கீர்த்தி சுரேசை 3 நாளாக டார்ச்சர் செய்த தனுஷ்

இவர்கள் இருவரும் பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் கீர்த்தி சுரேசை ஏதோ செய்ய சொன்னதாகவும், அதற்கு கீர்த்தி மறுத்ததாகவும் வலைப்பேச்சு சேனலை சேர்ந்த அந்தணன் கூறியிருக்கிறார்.

கீர்த்தி தான் சொன்னதை மறுத்ததால் அடுத்தடுத்து தனுஷ் அவருக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் ட்ரெயினுக்கு மேல் தான் நடந்து கொண்டிருக்கும். அப்போது கீர்த்தியை சரியாக நடிக்க விடாமல் ரொம்பவும் தொந்தரவு செய்து இருக்கிறார்.

இதனால் மூன்று நாட்கள் படப்பிடிப்பு சரியாக நடக்கவில்லையாம். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் அவருடைய அப்பாவுக்கு போன் பண்ணி அழுது கொண்டே நடந்து விஷயத்தை சொல்லி இருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அப்பா நடிகர் ரஜினிகாந்த்திற்கு நெருங்கிய நண்பர் என்பதால் ரஜினிக்கு நேரடியாக போன் பண்ணி இதைப்பற்றி சொல்லி இருக்கிறார்.

ரஜினி மூலம் தனுஷுக்கு இந்த விஷயம் போனதால், தனுஷ் அடக்கி வாசித்ததாகவும் அந்தணன் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார். தொடரி படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இருந்தது போல் இரண்டு பேருமே பேசிக்கொள்ளவில்லை. இதனால் அந்தணன் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என தெரியவில்லை.

Trending News