Actor Dhanush : தனுஷ் முன்பு போல் இல்லாமல் இப்போது மொத்தமாக மாறிவிட்டார். அவருடைய நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தெரிவதாக தனுஷின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறி வருகிறனர்.
அதாவது முன்பெல்லாம் தனுஷ் ஆறு மணிக்கு மேல் எடுக்கும் அவதாரமே வேறாகத்தான் இருக்கும். சூட்டிங் முடிந்த உடனே பார்ட்டி, என்ஜாய்மென்ட் என சென்று விடுவார்.
எப்போதுமே நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது என்று இருந்து வந்தார். இப்போது முழுக்க முழுக்க தனது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஒரு புறம் தனது அக்கா மகனை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார்.
ராயனாக அவதாரம் எடுக்கும் தனுஷ்
இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷே ராயன் என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக இளையராஜாவின் பயோபிக் படத்திலும் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார்.
மேலும் பல இயக்குனர்களிடம் இப்போது தனுஷ் கதை கேட்டு வருகிறாராம். ஏனென்றால் இப்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அஜித்தும் இரண்டு வருடத்திற்கு ஒரு படத்தை நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரஜினியின் அடுத்த இடம் தனக்கு தான் என படு பயங்கரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தனுஷ். இதனால் பிரேக் எடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.