Dhanush: ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும், காத்திருக்குமாம் கொக்கு’. அப்படி கொக்கு போல் காத்திருந்து ஒரு பெரிய வாய்ப்பை தட்டிப் பறித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் கிடையே பல வருடங்களாக ஒரு பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தனுஷை முந்த வேண்டும் என வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். கொஞ்ச ரெஸ்ட் எடுத்தாலும் மொத்தமும் அம்பேல் ஆகிவிடும் என உஷாராக பல்டி அடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அவர் வேகவேகமாக ஓடுவதால் பெரிய பட வாய்ப்பு ஒன்றை மிஸ் பண்ணி இருக்கிறார்.
அந்த வாய்ப்பை கொக்கு போல் தட்டி தூக்கி விட்டார் சிவகார்த்திகேயன். அட இந்த மொத்த பஞ்சாயத்துக்கும் காரணம் சூர்யா தான் சொன்னா நம்ப முடியுதா. தனக்கு மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்த சுதா கொங்கரா உடன் பணியாற்ற வேண்டிய படத்தையே வேண்டாம் என ஒதுக்கி விட்டார்.
மொத்தத்திற்கும் காரணம் மனைவியின் பாலிவுட் ஆசைதான் என்பது ஊர் அறிந்த உண்மை. முதலில் புறநானூறு படத்தை சூர்யா நடித்து, அவருடைய 2d என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. சூர்யாவிற்கும், சுதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட பிறகு சுதா கொங்கரா வேறொரு நடிகரை வைத்து இந்த படத்தை எடுக்க முடிவு செய்தார்.
உச்சகட்ட வருத்தத்தில் தனுஷ்
அதற்கான என் ஓ சி ஐ சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்கி விட்டார். தனுஷுக்கு இது போன்ற கதையின் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. ஆனால் அவரிடம் இருக்கும் கால் சீட்டுகள் ரெண்டு வருடத்திற்கு ஃபுல்லாக இருக்கிறது.
புறநானூறு படத்தை இரண்டு வருடங்கள் கழித்து எடுப்பதற்கு சுதா கொங்கராவிற்கு விருப்பமில்லை. இதனால் தனுஷை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது என சுதா தெளிவாக சொல்லிவிட்டார். தற்போது இந்த படத்தின் வாய்ப்பு சிவகார்த்திகேயனிடம் வந்துவிட்டது.
மேலும் சூர்யா மற்றும் சுதா கொங்கரா இடையே இருந்த மொத்த தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. நல்ல கதையை நழுவ விட்டு விட்டோம் என தற்போது தனுஷ் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறாராம்.
முரண்டு பிடித்த சூர்யா
- 2 பாகங்களாக வெளிவரும் கங்குவா
- சூர்யா போடப் போகும் அடிதடி
- படமே ஓடல ஆனா சூர்யாவுக்கு மண்டகணம் கூடி போச்சு