திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரிலீசுக்கு முன்பே கேப்டனுக்கு கொட்டும் பணமழை.. சிம்புவுக்கு பயத்தை காட்டிய தனுஷின் மில்லர்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளிவந்தது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான அந்த திரைப்படத்திற்கு தமிழை விட தெலுங்கில் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனாலேயே அங்கு தனுசுக்கான ரசிகர்களின் கூட்டமும் அதிகரித்தது. அதை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர்.

Also read: ரத்த சொந்தங்களை வெறுத்து ஒதுக்கும் தனுஷ்.. அதுக்குன்னு வளர்த்துவிட்டவரை அசிங்கப்படுத்துவதா

இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரீ பிசினஸும் 100 கோடியை நெருங்கி விட்டதாம். அந்த வகையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட், மற்றும் ஓவர் சீஸ் வியாபாரம் பட குழுவினரே எதிர்பார்க்காத வகையில் அமோகமாக நடந்து வருகிறது.

அதிலும் மற்ற மாநிலங்களின் உரிமையை கணக்கிட்டு பார்த்தால் இது இன்னும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். அந்த வகையில் படம் வெளிவருவதற்கு முன்பே இப்படி ஒரு சாதனையை புரிந்து இருப்பது மற்ற நடிகர்களுக்கு சிறு பயத்தை காட்டி இருக்கிறது. அதிலும் தனுசை சிம்புவுக்கு போட்டியாக தான் ரசிகர்கள் குறிப்பிடுவார்கள்.

Also read: ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்

அப்படி பார்த்தால் சிம்புவுக்கு இந்த விஷயம் நிச்சயம் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். கடைசியாக அவரின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகமும் வெளிவர இருக்கிறது.

இப்படி இந்த இரண்டு நடிகர்களும் போட்டி போட்டு நடித்து வருவது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. தற்போது தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு என பிசியாகி வரும் தனுஷ் அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ளார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. இதுவும் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Also read: வாத்தி படத்தின் 2வது நாள் வசூல்.. கோடிகளை வாரி குவிக்கும் தனுஷ்

Trending News