திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

தொடர் தோல்வியை சந்திக்கும் தனுஷ்.. மலைபோல் நம்பி இருக்கும் அடுத்த 2 படங்கள்

சமீபகாலமாக தனுஷின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்த வகையில் அவரின் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

அதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தனுஷ் இருக்கிறார். இந்நிலையில் அவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இரண்டு திரைப்படங்கள் வரும் ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

தனுஷ் இப்போது தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அதனால் இப்படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படம் தற்போது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே இவர் தனுஷின் யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வெளியிட இருக்கிறார்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

விரைவில் இப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகில் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த தனுஷ் இந்த இரண்டு படங்களையும் தான் தற்போது மலை போல் நம்பியிருக்கிறார். அவரின் இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Trending News