Actor Dhanush Movie Updated: தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழ், தெலுங்கில் வெளியான வாத்தி படத்திற்கு பிறகு இப்போது அவர் அருண் மாதேஸ்வரன் நடிப்பில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அவர் தன்னுடைய 50வது படமான ரயான் என்ற படத்தை தானே நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக நடிக்க இருக்கும் தன்னுடைய 51 ஆவது படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கப் போகிறார். இந்த படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு நடைபெற்றாலும் இன்னும் சூட்டிங் துவங்கப்படவில்லை.
Also Read: ஹீரோ விக்ரமுக்கே படத்தின் மேல அக்கறை இல்ல.. தனுஷ் படத்தில் வந்த மொத்த வம்பு
ஏனென்றால் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உறுதி செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் புஷ்பா படத்தின் மூலம் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களின் சொந்தக்காரி ஆனார். அதன் தொடர்ச்சியாக வாரிசு படத்திலும் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தளபதியின் ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது தனுஷின் 51 ஆவது படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். ரசிகர்களிடம் எக்ஸ்ப்ரஸ் குயின்னாக பார்க்கப்படும் ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷின் ஜோடி திரையில் எப்படி இருக்கும் என்று இப்பவே ரசிகர்கள் தங்கள் மன ஓட்டத்தில் கற்பனை செய்து பார்க்கின்றனர்.
இன்னும் இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போன்ற அப்டேட்டுகள் அனைத்தும் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிப்பில் அசுரனாக இருந்து கொண்டிருக்கும் தனுஷ், தொடர்ந்து தன்னுடைய படங்களில் அடுத்தடுத்த சம்பவங்களை செய்ய காத்திருக்கிறார்.
Also Read: கூடவே நடித்த ஹீரோக்களை கரெக்ட் செய்த 5 சீரியல் நடிகைகள்.. தனுசுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்