Captain Miller Twitter Review: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள கேப்டன் மில்லர் இன்று திரைக்கு வந்திருக்கிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் வழக்கம் போல தனுஷின் நடிப்பு பயங்கர மிரட்டலாக இருப்பதாக படத்தை பார்த்த அனைவரும் ஆர்ப்பரித்து வருகின்றனர். எப்போதுமே தன்னுடைய கேரக்டருக்கு நியாயம் சேர்க்கும் அவர் இதில் கேப்டன் மில்லராக மிரட்டி இருக்கிறார்.

அதிலும் படத்தின் மேக்கிங், பிஜிஎம், விசுவல் காட்சிகள், ஆக்சன் என அனைத்துமே வேற லெவலில் இருக்கிறது. முதல் பாதி ஆவரேஜ் ஆக இருந்தாலும் இரண்டாம் பாதி ஃபயராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இடைவேளை காட்சி எதிர்பார்க்காத அளவுக்கு இருப்பதாகவும், தேசிய கொடியை காட்டும் அந்த காட்சி புல்லரித்துள்ளதாகவும் ஒரு விமர்சகர் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி கோலிவுட் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினி, கமலுக்கு அடுத்ததாக தனுஷ் தான் என்றும் ஒரு ரசிகர் தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இப்படி வெறித்தனமாக கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் ரியல் கேப்டன் இயக்குனர் அருண் மாதேஸ்வரனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆக மொத்தம் தனுஷின் 3 வருட வியர்வை, தியாகம் அனைத்துக்கும் தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
