ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹீரோவாக களமிறங்கும் தனுஷ் குடும்ப வாரிசு.. பச்சைக்கொடி காட்டிய அஜித் பொண்ணு

Actor Dhanush: இப்போதெல்லாம் வாரிசுகள் ஹீரோவாக களமிறங்குவது அதிகமாகி விட்டது. துருவ் விக்ரமில் தொடங்கி விஜய் சேதுபதியின் மகன் வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தான் கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கிறது.

அதில் கொஞ்சம் மாறுதலாக விஜய்யின் மகன் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்நிலையில் தனுஷ் குடும்பத்தில் இருந்தும் ஒரு வாரிசு ஹிரோவாக களமிறங்க உள்ளார். அதன்படி தனுஷ் இப்போது D50 படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கு அடுத்ததாக அவர் தன்னுடைய அக்கா மகனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அப்படத்தில் அஜித்தின் ரீல் மகள் அனிகா ஹீரோயினாக கமிட் ஆகி இருக்கிறார். என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் இப்போது பக்கா ஹீரோயின் மெட்டீரியலாக மாறி இருக்கிறார்.

Also read: அஜித்துக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி.. பலிகிடா ஆகும் ரஜினி, சூர்யா விசுவாசிகள்

அந்த வகையில் ஏற்கனவே ஹீரோயின் ஆக இவர் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தற்போது D50 படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதையடுத்து தனுஷ் இயக்கும் அடுத்த படத்திலும் ஹீரோயின் ஆகியுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார்.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதியான செய்தியாக இருக்கிறது. அதன்படி இப்படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் தோன்ற இருக்கிறார். இப்படி ஆரம்பத்திலேயே ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: விடாமுயற்சி, தளபதி 68-ல் இருக்கும் ஒற்றுமையான விஷயங்கள்.. அட! ரிலீஸ் தேதியும் ஒன்னா?

Trending News