ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

திருமணம் ஆகியும் திருந்தாமல் இருந்த மருமகள்.. கடுப்பாகி திட்டிவிட்ட தனுஷின் அப்பா

Actor Dhanush: தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா சினிமாவில் பல படங்களை இயக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது மகன் தனுஷை துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு கஸ்தூரிராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் இவரைப் போலவே இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

அதன்பிறகு செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இருவரும் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தனர். இந்த சூழலில் திருமணம் ஆகியும் தனது மருமகள் திருந்தவில்லையே என கஸ்தூரிராஜா கண்டித்துள்ளார். இதனால்தான் அவர் மகனின் திருமண வாழ்க்கை முடிவுற்றதாக பயில்வான் கூறியிருக்கிறார்.

Also Read : மாமன்னன் படம் எப்படி இருக்கு.? முதல் விமர்சனத்தை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய தனுஷ்

அதாவது சினிமாவில் சோனியா அகர்வால் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் செல்வராகவனின் காதல் வலையில் விழுந்தார். மேலும் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் சோனியா அகர்வாலுக்கு வந்து கொண்டு இருந்தபோது செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு முன்பே சோனியா அகர்வாலுக்கு புகைபிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. கல்யாணத்திற்கு பிறகு திருந்தி விடுவார் என்று நினைத்த நிலையில் தன்னால் அந்த பழக்கத்தை விட முடியாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்துள்ளார்.

Also Read : மற்ற பிரபலங்களின் படங்களுக்கு பாடி கொடுத்த 5 நடிகர், நடிகைகள்.. கார்த்தியை தூக்கிவிட்டு அழகு பார்த்த தனுஷ்

இதனால் கஸ்தூரி ராஜா நேரடியாகவே சோனியா அகர்வால் இடம் இந்த பழக்கத்தை எல்லாம் உன்னால் விட முடியாதா என கொஞ்சம் கடுமையாகவே பேசி உள்ளார். அதற்கு சோனியா அகர்வால் என்னால் அதெல்லாம் விட முடியாது என்று வாக்குவாதம் ஏற்பட்டதால் செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் பிரிந்து விட்டனர்.

ஆனாலும் இருவரும் சண்டையிட்ட பிரிந்து கொள்ளாமல் சமரசமாக பிரிந்தனர். இப்போது வரை சோனியா அகர்வால், செல்வராகவன் உடன் தொலைபேசி வாயிலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதேபோல் தான் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மனம் ஒத்து பிரிந்த நிலையில் தங்களின் குழந்தைகளின் நிகழ்ச்சியில் இருவருமே தவறாமல் கலந்து கொள்கிறார்கள்.

Also Read : மீண்டும் கோதாவில் குதிக்கும் குதிரைக் கொம்பு கேரளத்து பைங்கிளி.. தனக்குத்தானே ஆப்பு வைக்கும் தனுஷ் நாயகி

Trending News