வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நாலா பக்கமும் வந்த சிக்கல்.. தனுஷுக்கு குடைச்சல் கொடுக்கப் போகும் சூர்யா

Dhanush: தனுஷ் இப்போது இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பு என படு பிஸியாக இருக்கிறார். இந்த சூழலில் இப்போது தனுஷ் கைவசம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற எக்கச்சக்க படங்கள் இருக்கிறது. பிப்ரவரி 14ஆம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து இட்லி கடை படத்தை வெளியிட சரியான நேரத்தை படக்குழு தேர்வு செய்திருந்தது. அதாவது அடுத்த வருடம் பெரிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் இது போன்ற சிறிய பட்ஜெட் படங்கள் சேர்ந்து வெளியிட்டால் பெரிய லாபத்தை அள்ளுவது கடினம்.

இந்த சூழலில் தக் லைஃப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களினால் ஜூன் 5 தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இட்லி கடை படத்தை ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் செய்யும் முடிவுகள் படக்குழுவினர் வந்தனர்.

சூர்யாவால் தனுஷ் படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

ஆனால் இதில் இப்போது என்ன சிக்கல் என்றால் இட்லி கடை படத்திற்கு போட்டியாக சூர்யா 44 படம் வெளியாக இருக்கிறது. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வருகிறது சூர்யாவின் 44வது படம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மார்ச் மாதம் இறுதியில் தான் முதலில் சூர்யா 44 படம் வெளியாவதாக இருந்தது. அந்த சமயத்தில் பவன் கல்யாண் மற்றும் வேறு ஒரு பெரிய நடிகரின் படங்கள் வெளியாவதால் மற்ற மொழிகளில் சூர்யா 44க்கு வரவேற்பு கிடைப்பது கடினம்.

இதை கருத்தில் கொண்டு தான் ஏப்ரல் 10ஆம் தேதி சூர்யா 44 வெளியாகிறது. சிங்கிளாக தன்னுடைய படத்தை வெளியிடலாம் என்று நினைத்து தனுஷுக்கு இப்போது இந்த செய்தி பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகையால் ரிலீஸ் தேதியில் மாற்றம் வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News