ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அடுத்த விருதுக்கு தயாராகும் தனுஷ்.. இணையத்தை கலக்கும் குபேரன் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

Actor Dhanush : தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. ஆனாலும் இப்போது படு பயங்கரமாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் தனுஷ் மும்மரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் என்ற படத்தை தனுஷ் இயக்கி, தானே நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி இருக்கிறது.

குபேரன் படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். நேற்றைய தினம் சிவராத்திரி அன்று ரசிகர்களுக்கு குபேரன் ஃபர்ஸ்ட் லுக் மூலம் தனுஷ் தரிசனம் கொடுத்திருக்கிறார். அதாவது அந்த போஸ்டரின் பின்னால் சிவன் உருவம் உள்ள நிலையில் தனுஷ் தாடி உடன் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

Also Read : கூட்டாளி சம்பளத்தை கேட்டு வயித்தெரிச்சலில் 5 நடிகர்கள்.. குடிக்க மட்டுமில்ல குளிப்பதற்கும் பன்னீர் கேட்கும் தனுஷ்

தனுஷ் இதுவரை நடித்திடாத ஒரு புதுவிதமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது இந்த போஸ்டர் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே ஆடுகளம் மற்றும் அசுரன் படத்திற்காக தனுஷ் தேசிய விருதை பெற்றிருந்தார்.

இப்போது குபேரா படத்தின் மூலம் அடுத்த நேஷனல் அவார்டுக்கு தனுஷ் தயாராகி வருகிறார். அதோடு இந்த படம் பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாந்த் குபேரா படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் இந்த டைட்டில் வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Trending News